வே. மாணிக்கம் (பி. 1946)
நெல்லை மாவட்டம் முந்நீர்ப் பள்ளத்தில் பிறந்த வே. மாணிக்கம் முப்பதாண்டுகளுக்கும் மேல் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். கட்டபொம்மன் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொண்ட கட்டபொம்மன் ஆய்வின் விளைவாக இவர் எழுதிய நூல்கள்: கட்டபொம்மன் கும்மிப்பாடல் (பதிப்பு, 1983); வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை (1992); வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு (1998); தானாபதிப் பிள்ளை வரலாறு (2005); கட்டபொம்மன் வரலாற்று உண்மைகள் (2006); ஊமத்துரை வரலாறு (2011)