Your cart is empty.
வி. சூரியநாராயண்
பிறப்பு: 1938
வி. சூரியநாராயண் (பி. 1938) தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆய்வுப் புலத்தில் இந்தியாவின் முன்னணி நிபுணர்களுள் ஒருவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தெற்கு, தென்கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தின் நிறுவன இயக்குநராகவும் மூத்த பேராசிரியராகவும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர். இந்தியா, அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் பல பல்கலைக்கழகங்களுக்கு வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் ஒரு பருவத்துக்கு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். புனேயில் சிம்பியாசிஸ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர். கலிங்கா சர்வதேச அமைப்பின் ‘கலிங்காசரஸ்வதி சம்மான்’ விருதை இந்திய - இந்தோனேஷிய நல்லுறவு மேம்பாட்டுக்கான முன்னோடிச் செயல்பாடுகளுக்காகப் பெற்றிருக்கிறார். தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சமகால நிலைமை குறித்து ஏராளமாக எழுதியுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அகதியின் துயரம்
இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களத மேலும்