Your cart is empty.
வாசு அரங்கநாதன்
வாசு அரங்கநாதன் வாசு அரங்கநாதன் 1988ஆம் வருடத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆய்வுப் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பணிசெய்த பிறகு, அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகம்வழித் தன்னுடைய கல்விப் பயணத்தை 1989இல் தொடங்கினார். மொழியைக் கணினிவழி ஆய்ந்த வாசு அரங்கநாதன், இலக்கியத்திலும் சமயத்திலும் ஈடுபடும் விதமாகத் தன்னுடைய இரண்டாவது முனைவர் பட்டத்தைப் (2010) பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் தெற்காசியத் துறையின் மாணவர்களுக்கு வாஷிங்டன், விஸ்கான்சின், மிஷிகன், பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்திருக்கிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தின் தெற்காசியத் துறையில் கடந்த பத்து வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். ‘இக்காலத் தமிழில் வேற்றுமைகள்’ என்பது பற்றியது இவருடைய அண்ணாமலைப் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வேடு. ‘திருமந்திரத்தின் மொழித்திறன்’ என்பது பற்றியது இவருடைய பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வேடு. “Tamil Language in Context: A Comprehensive Approach to Learning Tamil”, “Computational Approaches to Tamil Linguistics” என்னும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். கனடாவின் ‘Tamil Literary Garden’ இவருக்குச் சிறந்த தமிழ்க் கணினியாளருக்கான ‘சுந்தர ராமசாமி விருதை’ (2011) வழங்கிப் பாராட்டியது. இவருடைய இரண்டாவது நூலுக்கு, மொழியையும் கணினியையும் இணைக்கும் சிறந்த முயற்சி என ‘அச்சுத மேனன் விருதை’, Dravidian Linguistics Association, Kerala கொடுத்துப் பாராட்டியுள்ளது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம் சங்கம்முதல் இன்றுவரை
வரலாற்றில் தமிழ் மொழி அடைந்து வந்துள்ள மாற்றங்களையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் தகுந்த ஆதாரங்களு மேலும்