Your cart is empty.
வெ. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு: 1947
சென்னை ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்று, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்ப் பற்றினால் தமிழுக்கான சொல்திருத்தி, ஓ.சி.ஆர்., உடனடி எழுத்து உணரி போன்ற மென்பொருட்களை வடிவமைத்தவர். கணிப்பொறியின் தமிழ்99 விசைப்பலகையில் தானாகப் புள்ளி வைப்பதற்கான இவருடைய உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கைபேசிகளில் விரைவாக உள்ளிட ஒரு விசைப்பலகையைத் தற்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறார். கோலத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் பத்துப் பகுதிகள் உள்ள ஒரு பெரிய தொகுப்பினை வடிவமைத்துள்ளார். அதில் கோலத்தின் பல பரிமாணங்களையும் புதிய நோக்கில் காணும் இந்தப் புத்தகமும் ஒன்று.
