Your cart is empty.
வெ. லீலா
பிறப்பு: 1940
சிறுவயதுமுதலே கோலத்தில் ஆர்வம் கொண்டவர். கோலப்புலவர் சாவி தம்பிராசுவிடம் சிறிய கோலங்களைக் கொண்டு பெரிய கோலங்களை உருவாக்கும் முறையைக் கற்றவர். கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் இந்த முறையைப் பல நூறு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவருகிறார். ஒரு லட்சத்திற்கும் மேலாகப் புள்ளிகள் கொண்ட, ஒரே கோட்டிலான கோலங்களைப் பெரிய வெள்ளைத் திரையிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வரைந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் கோலங்கள் வரைந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பல சுவையான அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
