Your cart is empty.
சூ டிஷான்
பிறப்பு: பி. 1894-1941
லுலுவோ ஹுவா ஷெங் எனும் புனைபெயரைக் கொண்டவர். சீனாவின் புகழ்மிக்க எழுத்தாளர், அறிஞர். தைவானிலுள்ள தைனானில் பிறந்தார். கல்வியை குவாந்தொங்கில் முடித்தார். 1913முதல் 1916வரை மியன்மாரின் யாங்கோனில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1916இல் நாடு திரும்பிய அவர் அமெரிக்கா சென்று கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1924இல் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மத வரலாறு, இந்தியத் தத்துவம், சமஸ்கிருதம், நாட்டுப்புறவியல் ஆகியவற்றைப் பயின்றார். படிப்பை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில் இந்தியாவுக்கு வந்து சமஸ்கிருதமும் பௌத்தமும் கற்றார். இந்திய நாட்டுப்புறக் கதைகளைச் சீன மொழியில் மொழிபெயர்த்தார். 1925இல் அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வலை பின்னும் சிலந்தி’ நூல் வெளியானது. மதங்களின் வரலாற்றில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த சூ டிஷான் தன் வாழ்நாள் முழுதும் பௌத்தம், கிறித்துவம், கன்ஃபூஷியத் தத்துவம், தாவோயிசம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார்.
