Your cart is empty.
ஒய்.பி. சத்தியநாராயணா
ஓய்.பி. சத்தியநாராயணா டாக்டர் ஒய்.பி. சத்தியநாராயணா, ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தவர். பாலய்யா – நரசம்மா தம்பதியருக்கு ஆறாவது குழந்தை அவர். 1971இல் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படித்து முடித்ததும் நிர்மல் அரசு ஜூனியர் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்தார். தமது முப்பத்து மூன்றாவது வயதில் தர்மவந்த் அறிவியல் வணிகக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பேற்று இருபத்தைந்து வருடங்கள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். சுமார் முப்பது ஆண்டுகளாக மாணவர்களுக்கு வேதியியல் கற்பித்து வந்தார். (அதில் அவர் முனைவர் பட்டம் பெற்றிருந்தார்) கக்காட்டியா, உஸ்மானியா பல்கலைக்கழகங்களின் ஆட்சிக் குழுக்களில் முக்கியமான பதவிகள் வகித்தார். டாக்டர் அம்பேத்கரின் தீவிர ஆதரவாளரான சத்திய நாராயணா 1990களில் தலித் இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். பல்வேறு துறைகளில் தலித்துகளின் முன்னேற்றம் பற்றி ஆராயத் தொடங்கினார். 2006 அக்டோபர் 14இல் ஆயிரக்கணக்கான தலித்துகளுடன் இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவினார். தற்போது இவர் ஹைதராபாத்திலுள்ள தலித் ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கிறார்.