Your cart is empty.
சக்கரியா
பிறப்பு: 1945
சக்கரியா (பி. 1945) கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் உருளிக்குன்னத்தில் ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர். உருளிக்குன்னம், பாலா, மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். பெங்களூர், காஞ்ஞிரப்பள்ளி கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தவர். ‘ஏஷியாநெட்’ மலையாளத் தொலைக்காட்சியின் நிறுவன ஆலோசகர். இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். சொந்தப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் உட்பட இருபத்துமூன்று நூல்களுக்கு ஆசிரியர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லா இலக்கியப் பிரிவுகளிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். அருந்ததி ராயின் ‘தி எண்ட் ஆஃப் இமாஜினேஷன்’ கட்டுரையை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இதுதான் என்பெயர்
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக் மேலும்