Your cart is empty.
16 Oct 2023
லட்சியம், குறிக்கோள், என்று எதுவும் இல்லாத, எளிய மனிதர்களின் வாழ்வைப் பேசும் சமூக
நாவல் இது.
கதை என்பதை ஒரு வரியில் சொல்லிவிடலாம். தன் பழைய காதலியைத் தேடி வந்து, அவள்
இறந்த செய்தி கேட்டு, பின்னர் அவள் சாயலில் இருக்கும் அவளது மகளின் மேல் ஆசை
கொண்டு இறுதியில் ஏற்படும் முடிவு மனம் வெம்பச் செய்கிறது .
அம்பி கதையின் நாயகன். பிறந்தது முதல் உறவுகளை சார்ந்து வாழ்ந்ததால் அவர்களின்
குத்தல் பேச்சில் தொலைந்து போன பால்யத்தில்..... அம்மாவும் அகாலமாய் இறந்து விட, .....
சக்கு (சகுந்தலா)வை பார்க்க , பழக அவள் வீடே அவனுக்கு சகலமும் என்று ஆக்கிக்
கொள்ளப் பார்த்தவனை விதி விடவில்லை .
அம்பியின் மாமன் அம்பியையும், சக்குவையும் இணைத்து திண்ணையில் வம்பு பேச , அவரை
இழுத்துத் தள்ளி வயிற்றோடு கால் பதிய தரையோடு அழுத்தி விட்டு , அன்றைக்குக் கரடி
மலையிலிருந்து ரயிலுக்கு டிக்கட் எடுக்கக்கூட கதியற்றவனாய் ஊரை விட்டு ஓடிப் போன
அம்பி , பிறகு பல வருடங்கள் கழித்து தன் இளமை கழிந்த பின் குழந்தையற்றுப் போன
வெற்று வாழ்க்கை போரடித்துப் போகவே மனைவி சாவித்திரியை அழைத்துக் கொண்டு ,
செல்வாக்காய் பணம் படைத்தவனாய் கரடி மலைக்கு திரும்ப வருகிறான்.
கரடிமலைக்கு அவன் வரக் காரணம் சக்கு (சகுந்தலா), அம்பியின் பால்ய கால சகி, இதை
அவன் கரடிமலையில் இருந்த காலம் வரை அவன் அவளிடமோ, அவள் அவனிடமோ
பிரியத்தை சொற்களால் காட்டிக்கொள்ளவில்லை.
இக்கதையில், எந்தக் கரடி மலை திருவேலநாதர் கோயிலில், அம்பியை தினம் தினம் காண
நேர்ந்ததோ அங்கேயே அவன் ஊரை விட்டு ஓடிய பின் சக்கு தன் உயிரையும் விடுகிறாள்.
பாவம் சக்கு அழுது அழுதே உயிரை விட்டு விடுகிறாள் . அப்பாவிக் கணவனையும், அறியாத
மகளான அபிதாவையும் அனாதைகளாக இவ்வுலகில் விட்டு விட்டு அம்பியின் பொருட்டு
நிறைவேறாத அவள் ஆசையினால் உயிரை விடுகிறாள்.
தன் பழைய காதலி இறந்து போன விஷயம் தெரிய வருகிறது. காதலியைப் போலவே
தோற்றம் உள்ள அவள் மகள் மீது காதல் கொள்கிறான். அம்பி, அபிதாவை சக்கு வென்றே
நம்ப முயற்சிக்கிறான். அம்பியின் மனநிலை என்ன என்று கூறிக்கொண்டே கதை நகரும்.
சாவித்திரி கணவனோடு (அம்பி) வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பேசி துணிந்து நின்றாலும்
, அவனது செயல்பாடுகளைப் பற்றியோ, அவனுக்கு உள்ளிருக்கும் தவறான எண்ணங்களைப்
பற்றியோ அவளே சுட்டிக் காட்டினாலும் கூட... கேட்கக் கூடியவனாக அம்பி இல்லை.
வாழ்கை எப்படியெல்லாம் மனித வாழ்வைப் புரட்டிப் போடுகிறது என்பதற்கு அபிதா ஒரு
உதாரணம். அவளுக்கு இன்பமான நினைவுகள் இல்லாமல் இல்லை அப்பாவின் மறுதாரமாய்
வந்த சித்தியின் தம்பி அவளுக்கொரு பிரியமான கணவனாகியிருக்கக் கூடும், அபிதா , கரடி
மலை உடைந்த சிற்பத்தின் அருகே ஏற்பட்ட விபத்தில் அம்மாவைப் போலவே இவளும்
இறந்து விடுகிறாள்.
அபிதா என்று பெயரிட்டதற்குக் காரணம் கூறியுள்ளார். அபித குசலாம்பாள் என்ற பெயரின்
தமிழ் வடிவம் உண்ணா முலையாள். அபிதா = உண்ணா (ஸ்பரிசிக்க இயலாத) என்ற
அர்த்தத்தைத் தானே தருவித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
அபிதாவை வாசித்தவர் லா.ச.ரா.வின் கவித்துவமான எழுத்து நடையை பாராட்டாமல் செல்ல
இயலாது. வாழ்வியல் மனச்சிக்கல்களை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்.