Your cart is empty.
அசதா
பிறப்பு: 1973
இயற்பெயர் அ. சகாய ஆரோக்கியதாஸ். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் முகையூர். கவிஞர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். ‘பிஷப்புகளின் ராணி’ (கவிதை), ‘வார்த்தைப்பாடு’ (சிறுகதைகள்) ஆகியவை இவரது நூல்கள். மொழிபெயர்ப்புக்கென 2003இல் திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும், ‘நிலத்தின் விளிம்புக்கு’ நாவலுக்கு 2015இல் ஆனந்த விகடன் விருதும் 2023ஆம் ஆண்டுக்கான நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதும் பெற்றிருக்கிறார். 2004ஆம் ஆண்டு சாகித்திய அகாதமியின் ‘இளம் எழுத்தாளர்களுக்கான பயண நல்கை’ இவருக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார், விழுப்புரத்தில் வசித்துவருகிறார்.
மின்னஞ்சல்: jayanthandass@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆன்ம வணிகன்
தனது கடந்தகால சுயத்தை அறியும் பொருட்டு முன்பு மேற்கொண்ட பயணங்களின் பாதையில் மீண்டும் பயணிக்கும் க மேலும்





