Your cart is empty.

லோகமாதேவி
பிறப்பு: 1970
20 ஆண்டுகளாகத் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். துறைத்தலைவர். துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைதளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தாவரவியல் துறைசார் நூல்களை எழுதியிருக்கிறார்.
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பக்கத்தின் திருத்துநர், மதிப்பீட்டுக் குழுவின் பங்களிப்பாளர், மேற்பார்வையாளர்.
தாவரவியல், சூழியல் துறைகளில் தலைசிறந்த ஆளுமைகளுள் ஒருவராக விளங்குவதற்காகவும், சமூகப் பங்களிப்புக்காகவும் இந்திய மருத்துவக் கழகம் வழங்கும் ‘Women of Wonder’ விருதை 2025இல் பெற்றிருக்கிறார். தற்போது ஈரோடு வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். தாவரவியல் கலைச்சொல் அகராதியைத் தயாரித்துவருகிறார்.