Your cart is empty.

ராஜலக்ஷ்மி சிவலிங்கம்
பிறப்பு: 1966
சுயாதீன ஊடகவியலாளர், இந்தி ஆசிரியை. சென்னையில் வசித்துவருகிறார். கணவர் மு. சிவலிங்கம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், ஊடகவியலாளர். குழந்தைகள் மகள் சிந்து, மகன் ஆதித்யா.
மொழிபெயர்ப்பில் சுமார் 17 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இதுவரை 10 நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். என்.ஜி.சி., பி.பி.சி., டிஸ்கவரி ஆகிய சேனல்களின் தொடர்கள், ஆங்கிலத் திரைப்படங்கள், தொடர்களுக்கு சப்டைட்டில் எழுதியுள்ளார்.
தி இந்து (தமிழ்) நாளிதழில் பிரபலமானவர்களின் பிறந்த நாளில் அவர்களைப் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எழுதியுள்ளார்.
தொடர்புக்கு: rajalakshmi.di@gmail.com