Your cart is empty.
சுனில் கிருஷ்ணன்
பிறப்பு: பி. 1986
சுனில் கிருஷ்ணன் சிறுகதைகள், நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என இயங்கி வருபவர். காந்தி, காந்தியர்கள், காந்தியத்திற்காக www.gandhitodaytamil.com என்றொரு இணையதளத்தை நடத்தி வருகிறார். தற்போது காரைக்குடியில் தொழில்முறை ஆயுர்வேத மருத்துவராக உள்ளார். அவரது முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கைக்கு’ 2018ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. ‘அன்புள்ள புல்புல்’, ‘நாளைய காந்தி’, ‘ஆயிரம் காந்திகள்’ போன்ற கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். ‘காந்தியைச் சுமப்பவர்கள்’, ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ போன்ற நூல்களின் தொகுப்பாசிரியர். ‘மகாத்மாவிற்கு அஞ்சலி’, ‘சுதந்திரமும் சமூகநீதியும்’ ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். பாரதிய வித்யா பவன் வெளியிட்ட Mahathma Gandhi in Tamil எனும் நூலின் தொகுப்பாசிரியர்.
மின்னஞ்சல் : drsuneelkrishnan@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காந்தியின் தன்வரலாறு (இ-புத்தகம்)
₹700.92
‘சத்திய சோதனை’ எனப் பரவலாக அறியப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தன்வரலாறு தமிழுக்குப் புதித மேலும்

