Your cart is empty.
அ. ஜாகிர் ஹுசைன்
பிறப்பு: 1971
அ. ஜாகிர் ஹுசைன் (பி. 1971)
அ. ஜாகிர் ஹுசைன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரபுத்துறைப் பேராசிரியராகவும் அரபுமொழிப் பாடத்திட்டக்குழுத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
தமிழக அரசின் சார்பில் திருக்குறளையும் அவ்வையாரின் ஆத்திசூடியையும் அரபியில் மொழியாக்கம் செய்துள்ளார். கவிதையை நம்பாதே, நிசார் கப்பானி கவிதைகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் 35க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது மேற்பார்வையில் 45 மாணவர்கள் இளநிலை ஆய்வு ‘எம்.ஃபில்.’ பட்டமும் எட்டு மாணவர்கள் முதுநிலை ஆய்வு ‘முனைவர்’ பட்டமும் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் முதல்முறையாக அரபு நாடக விழாவையும் சூஃபி இசை விழாவையும் நடத்தியுள்ளார். தமிழக அரசின் 2016க்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, சென்னை கம்பன் கழகத்தின் ‘சீறாப்புராணம் பரிசில் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
மின்னஞ்சல்: drjahir2008@gmail.com
தொலைபேசி: 9444427086
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நாடோடிக் கட்டில்
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர் மேலும்