Your cart is empty.
அகிலா
பிறப்பு: None
அகிலா
மொழிபெயர்ப்பாளர்
எழுத்தாளர், திறனாய்வாளர், பேச்சாளர், ஓவியர். கோவையில் மனநல ஆலோசகராகப் பணியில் உள்ளார்.
பொறியியல் பட்டப்படிப்பு, முதுகலையில் கணினிப் பயன்பாட்டியல், முதுகலை உளவியல் பயன்பாட்டியல் படிப்பு (AMIE, PGDCA, MCA, M Sc (App. Psy), PGDPC) முடித்துள்ள இவர், தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிவருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வுக் கட்டுரைகள் என இதுவரை 20 நூல்கள் வெளிவந்துள்ளன.
கணையாழி, கல்கி போன்ற இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் இலக்கியவெளி, தமிழினி போன்ற இணைய இதழ்களிலும் சிறுகதை, திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆராய்ச்சி இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
‘சக்தி விருது’ (2014), நெருஞ்சி இலக்கிய இயக்கத்தின் ‘தமிழ்ச் சூழலில் படைப்பாளுமை விருது’ (2018), ‘அசோகமித்திரன் நினைவு இலக்கிய விருது’ (2019), ‘சௌமா இலக்கிய விருது’ (2021), ‘திருப்பூர் இலக்கிய விருது’ (2021) போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கான மனநல ஆலோசனைகள் சார்ந்தும், பெண் முன்னேற்றம், சமூக விழிப்புணர்வு சார்ந்தும் உரைகள் நிகழ்த்திவருகிறார். அதன் காரணமாகப் ‘பெண் சாதனையாளர்’, ‘பெண்ணியச் சிந்தனைச் சிகரம்’, ‘சிங்கப் பெண்ணே 2022’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.