Your cart is empty.
ஈஸ்வரி
பிறப்பு: பி. 1986
இயற்பெயர் சோ சின். 2007இல் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் அறிவிப்பாளராகப் பணியேற்றார். 2016இல் அப்பணியில் இருந்து விலகி லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய–ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் முதுகலை பயின்றார். தற்போது பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவருடைய கவிதைகள் காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளன; சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’ என்னும் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கல்விப் புலம் சார்ந்து ‘சீனப் பண்பாட்டின் அழகு’, ‘பேச்சுத் தமிழ் அறிமுகம்’ என்னும் இரு நூல்களை எழுதியுள்ள இவர், தமிழ் இலக்கியம், இந்தியப் பண்பாடு, புலம்பெயர் தமிழிலக்கியம் சார்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார். இவருடைய கட்டுரைகள் காலச்சுவடு, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடுகளில் வெளியாகியுள்ளன.
