Your cart is empty.
மா. கலைச்செல்வன்
பிறப்பு: 1971
கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்தவர். திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் கண்ணச ராமாயணத்தைத் தமிழ்ப்படுத்தி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். வி.கே. நாயரின் ‘பையன் கதைகள்’, டி. பத்மநாபனின் ‘சுடரொளி பரப்பும் சிறுமி’, எம்.பி. மினியின் ‘வௌவால் வருஷம்’, கடம்பழிபுறம் கே.என். குட்டியின் ‘பாரதத்தில் பாட்டி கதைகள்’ முதலான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘பையன் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சிறந்த மொழிபெயர்ப்புக்கான ‘நல்லி திசை எட்டும்’ விருதைப் பெற்றுள்ளார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இவரது மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் நடுவண் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
