Your cart is empty.
ப. சகதேவன்
பிறப்பு: 1952
இயற்பெயர் கிருஷ்ணசாமி. பொள்ளாச்சிப் பகுதியைச் சேர்ந்தவர். தமிழாசிரியராகப் பெங்களூரில் பணியாற்றி ஓய்வுக்குப் பின் பெங்களூர் கிறித்து நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராகச் செயல்பட்டுவருகிறார்.
கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, தொகுப்பு, பண்பாட்டு ஆய்வு ஆகிய துறைகளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பங்களித்துவருகிறார். விழாக் காலம் மறுபடிப் பிறந்து, அத்துவானக் காடு, ஊர் நடுவே அரச மரம் (கவிதை), அடிவாழை (சிறுகதை), அந்திமம் (நாவல்) இவரது படைப்புகள். கன்னட எழுத்தாளர் பூரணச் சந்திர தேஜஸ்வியின் ‘சிதம்பர ரகசியம்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமியின் பரிசைப் பெற்றார். முன்னோடித் தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு., மௌனி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது படைப்புகள் மீதான திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான இலக்கியத் தடம் வரிசையை உருவாக்கியவர். பெ. தூரனின் பண்பாட்டுப் பங்களிப்புப் பற்றிய நூலையும் எழுதியுள்ளார்.
பெங்களூரிலும் பொள்ளாச்சியிலுமாக வசிக்கிறார்.
மின்னஞ்சல்: krishnaswamip@yahoo.com
