Your cart is empty.
புகழேந்தி
பிறப்பு: 1980
புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பதினோரு ஆண்டுகளுக்கு மேலாகத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். பிரெஞ்சு மொழி, இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் இளநிலை, முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறார். இவர் சில தமிழ் இலக்கியப் படைப்புகளையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பின் வரலாற்றைப் பாடமாக நடத்திவரும் இவர் இந்திய மொழிகளுக்கான தனிப்பட்ட மொழிபெயர்ப்பு வரலாற்றைக் கண்டறியும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார். தற்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உதவியுடன் தொல்காப்பியத்தை பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மின்னஞ்சல்: pugazh2005@yahoo.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வாழ்வின் தாள முடியா மென்மை
-செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வி மேலும்