Your cart is empty.
வெ. ஜீவானந்தம்
பிறப்பு: 1964-2021
வெ. ஜீவானந்தம் ஈரோட்டில் 1946இல் பிறந்தவர். பொதுவுடைமை இயக்கப் பின்னணியும் திராவிட இயக்கப் பின்னணியும் சூழ வளர்ந்த ஜீவானந்தம் இரு இயக்கங்கள் சார்ந்த சிந்தனையையும் பெற்றிருந்தார். பிற்காலத்தில் காந்தியராக ஆனார். இந்தியாவில் இடது சிந்தனையானது மேற்கண்ட மூன்று சிந்தனைகளின் சங்கமமாக இருக்க வேண்டும் என்பதே ஜீவாவின் பார்வை.
சுமார் 45 ஆண்டுக் காலம் மருத்துவத் துறைக்குப் பங்களித்த மருத்துவர் ஜீவானந்தம். தமிழ்நாட்டில் போதை மீட்பு சிகிச்சை முன்னோடிகளில் ஒருவர். நலந்தா போதை நீக்கு மையம் வழியாகப் பல ஆயிரம் ஏழைகளுக்குச் சிகிச்சை வழங்கி அவர்களை மீட்டதன் வாயிலாகப் பல ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணமளித்த பெருமை ஜீவாவுக்கு உண்டு.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் தரமான கல்வியும் சுகாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் அரசும் தனியாரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கருதினார். கூட்டுறவு முறையில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிறுவி வசதியானோருக்கு நியாயமான கட்டணத்திலும் வசதியற்றோருக்குக் கட்டணமில்லாமலும் சேவைகளை வழங்கலாம் என அவர் திட்டமிட்டார். கூட்டுறவு முறையில் மூன்று கல்வி நிறுவனங்கள், ஏழு மருத்துவமனைகளை அவர் நிறுவினார்.
ஜீவானந்தம் பழந்தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். பாரதிமீது தீவிரமான பற்றுக் கொண்டவர். எழுத்தாக்கம், மொழியாக்கம் என இதுவரை 125க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவை தமிழ் அறிவுச் சூழலுக்கு அவருடைய பங்களிப்பாக உள்ளன. சூழலியல், கல்வி, மருத்துவம் சார்ந்த பல நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
காந்தியையும் ஜே.சி. குமரப்பாவையும் தன்னுடைய ஆதர்ச மனிதர்களாக ஏற்றுக் கொண்டு செயல்புரிந்த இவர் நவீன இந்தியாவின் சுற்றுச்சூழல் முன்னோடிகளில் ஒருவர். காடுகளைப் பேணுதல், பழங்குடியினர் நலன், இயற்கை வேளாண்மை, சுதேசி இயக்கம் ஆகிய செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.
மரங்கள் பேசும் மௌன மொழி என்னும் இந்த நூல் ஜீவானந்தம் தன் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் மேற்கொண்ட மொழியாக்கப் பணியாகும். “படியுங்கள், சிந்தியுங்கள், புதிய காந்தியாகுங்கள்” என்னும் அறைகூவலை இளைஞர்களிடம் முன்வைத்த ஜீவானந்தம் மரங்களின் வியத்தகு உண்மைகளைக் கூறும் இந்த நூலைத் தன் இறுதிக் கொடையாகத் தமிழுக்குத் தந்து சென்றிருக்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மரங்கள் பேசும் மௌன மொழி
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படி மேலும்