Your cart is empty.
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
பிறப்பு: 1963
மொழிபெயர்ப்பாளர்
பிரஞ்சு, தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம் அமைத்துவருபவர். கடந்த 33 ஆண்டுகளாகப் புதுச்சேரியில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை ஒன்பது புதினங்களைப் பிரஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்துள்ளார்.பிரஞ்சுச் சிறுகதைகளின் மொழியாக்கத் தொகுப்புகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளார். தமிழிலிருந்து கதைகள், கவிதைளைப் பிரஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார்.
சங்க இலக்கியச் செல்வங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றை முழுமையாக இவர் பிரஞ்சு மொழியாக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1994, 2008 ஆகிய ஆண்டுகளில் பிரான்ஸ் சென்று, அரசின் உதவியுடன் பிரான்ஸில் சில மாதங்கள் பயிற்சியும் நூலகங்களில் ஆய்வும் மேற்கொண்டவர். இவரது பிரஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றினை, 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் மூன்று மாதங்கள் பிரான்ஸில் தங்கி முடிக்க பிரஞ்சு அரசு உதவி செய்தது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவரும் இவருடைய மொழியாக்க நடையின் எளிமை கி.ரா., பிரபஞ்சன் உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளைக் கவர்ந்து பாராட்டைப் பெற்றதாகும்.
மொழியாக்கப் பணிக்காக மும்பை ‘ஸ்பாரோ’ அமைப்பின் ‘2020ஆம் ஆண்டுக்கான இலக்கிய விரு’தினைப் பெற்றவர். 2021ஆம் ஆண்டுக்கான பிரஞ்சு அரசின் ‘ரோமன் ரோலன் மொழியாக்க விரு’தினைப் பெற்றார்.
இவரின் தமிழ் - பிரஞ்சு மொழிபெயர்ப்புச் சேவையைப் பாராட்டி ‘நல்லி - திசை எட்டும் மொழியாக்க விரு’தினை 2022ஆம் ஆண்டு பெற்றார்.
கைப்பேசி : 9952146562
மின்னஞ்சல் : vengadasouprayanayagar@gmail.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பெருந்தொற்று
-அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினம், அண்மையில் உலகை உலுக்கிய
கொரோனாப் பெருந்தொற்று நோயின மேலும்