Your cart is empty.
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு.
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி முதலியவர்களின் சிறுகதைப் படைப்புகளால், நவீனத் மேலும்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு.
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.
'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரை களையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர் வகைகளும் இவற்றினூடான மனித அசைவு களும் பன்முகத்தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல் லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.
தொ. பரமசிவத்திடமிருந்து தெறிக்கும் கருத்துகளும், சான்று மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக் கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும், பழகிப் பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்/தொடர்/பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர் முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது.
ஆ. இரா. வேங்கடாசலபதி
‘பெரிய எழுத்துப் புத்தகங்கள்’, ‘குஜிலி நூல்கள்’, ‘காலணா, அரையணா பாட்டுப் புத்தகங்கள்’, ‘தெருப்பாடல்கள்’ என்று பலவாறாக அழைக்கப்பட்ட வெகுசன இலக்கியக் கருவூலம் பற்றிய முதல் நூல் இது. மெல்லியதாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், பரப்பியோர், வாசகர்கள், வாசிப்பு முறை ஆகியவற்றை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. துண்டு துணுக்குகளாகப் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் அரிய செய்திகளைக் கொண்டு சுவையாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்ட நூல் இது.
வாசிப்பு என்றதும் ஒருவர் தனியாக அமர்ந்து மௌனமாக வாசிக்கும் காட்சி நம் மனதில் இயல்பாக எழக்கூடும். இத்தகைய வாசிப்புக்கு வயது சற்றேறக்குறைய நூறு ஆண்டுகள் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். வாசிப்பு என்பது பொது இடங்களில் சமூக நிகழ்வாக இருந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இந்த மாற்றத்தின் பின்னணியில் நவீன தமிழின் வளர்ச்சிப் போக்கு இருக்கிறது. நாவல் என்னும் கலைவடிவம் தமிழுக்கு வந்த விதமும் வளர்ந்த விதமும் இருக்கின்றன.
நாவலை ஒரு கலை வடிவமாக அல்லாமல் பண்பாட்டு வரலாற்றின் முக்கியக் கூறாகக் கண்டு அதன் பன்முகப் பரிமாணங்களை ஆழ்ந்து அலசும் நூல் இது. ஆ. இரா. வேங்கடாசலபதி வரலாற்றுக்குரிய துல்லியமும் புனைவுக்குரிய சுவையும் கொண்ட மொழியில் இதை எழுதியிருக்கிறார்.
நாவல் என்பது பன்முக வாசிப்புக்கு உரியது. நாவல் வாசிப்பும் வரலாறு, சமூகம், பண்பாடு எனப் பன்முக அடையாளம் கொண்டது. அந்த அடையாளங்களைச் சித்திரமாகத் தீட்டுகிறது சலபதியின் எழுத்து.
தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் ‘மணிக் கொடி’க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும் பாரதி தாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி மரபினரான புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு. செல்லப்பா முதலானோர் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை விளக்குகிறார் ய. மணிகண்டன். கெட்டிதட்டிப்போன மனப்பதிவுகளையும் முன்னெண்ணங்களையும் ஏராளமான புதிய செய்திகளோடு தகர்க்கும் சுவையான ஆராய்ச்சி நூல் இது. ஆ.இரா. வேங்கடாசலபதி
மார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது. இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காணவும், இலக்கியத்தை ஒரு அறிதல் முறையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளவும் மார்க்சியத் திறனாய்வு நமக்கு உதவுகிறது. இலக்கியம் பற்றிய நமது புரிதலை அது ஆழப்படுத்துகிறது. உடனடியான அரசியல் இலக்குகளுக்கு அப்பாலான, இலக்கியம் பற்றிய ஒரு அகன்ற பார்வையை அது நமக்கு வழங்குகிறது. தமிழ்ச் சூழலில் நிலைபெற்றுள்ள வரட்டு மார்க்சியப் பார்வையையும் எதிர் மார்க்சியப் பார்வையையும் விமர்சிக்கும் இந்நூலின் மீள்வருகை புதிய தலைமுறை வாசகர்களின் சிந்தனையைக் கிளறிவிடும் என்று நம்பலாம்.
காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது. வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் ‘பாசிக்குட்டையில்’ பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு குடும்பம் பத்தினிமை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்!
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி முதலியவர்களின் சிறுகதைப் படைப்புகளால், நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம்பெறும் ‘மணிக்கொடி’ நவீனக் கவிதை வளர்ச்சிக்கும் தனித்த பங்களிப்பை வழங்கியுள்ளது. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகி முதலியோரின் மரபுக்கவிதைகளும், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. முதலியோரின் வசனகவிதைகளும், புதுமைப்பித்தன் உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ‘மணிக்கொடி’யில் இடம்பெற்றன. ‘மணிக்கொடி’யின் கவிதைப் பங்களிப்பு உரிய கவனத்தைப் பெறும் வகையில் ‘மணிக்கொடி’யில் வெளிவந்த அனைத்துக் கவிதை களையும் இந்நூல் முதன்முறையாகத் தேடித் திரட்டி வழங்குகிறது.
1921 - 1939 காலகட்டத்தில் வ. வே. சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, சங்கு ஸுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ. சுந்தரராஜன், ந. சிதம்பர சுப்ரமண்யன், தி. ஜ. ரா., மௌனி, லா.ச. ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள் எழுதிய புதுமையான உருவ -உள்ளடக்கங்களைக் கொண்ட சிறுகதைகளைக் காலவரிசைப்படி எடுத்துக்கொண்டு, சிறுகதை வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு என்ன, நிறைகுறைகள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ‘தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.’ இலக்கிய வாசகர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய விமர்சன நூல்.
காதல், காமம், மரணம், கேளிக்கை, கடவுள் துரோகம், சுய இருப்பு ஆகியவை நவீன வாழ்வில் நிகழ்த்தும் பகடையாட்டங்கள் குறித்தான சிந்தனைகள், அவற்றிற்கு மனித மனம் அரங்கேற்றும் எதிர்வினைகள், இந்தச் சிந்தனைகளுக்கும் வினைகளுக்கும் இடையேயான ஊசலாட்டம் - இவையே வா.மணிகண்டனின் கவிதைகளின் சாரம். தன்னிடமிருந்து நுரைத்துப் பொங்கும் உணர்ச்சிகள் நசுக்கப்படுகின்ற கணத்தில் வெளியேற முயற்சிக்கும் நகர மனிதனின் சிதைக்கப்பட்ட குரல்வேற்றுமைகளாக இந்தக் கவிதைகள் உருக்கொள்கின்றன.
சுந்தர ராமசாமியின் சிறுகதை, கவிதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் கவிதைத் தொகுப்பு இது. 1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள 29 கவிதைகளுடன் அதில் இடம்பெற்றிருந்த முன்னணி ஓவியர்களின் கோட்டோவியங்களும் இத்தொகுப்பில் முழுமையாக இடம்பெற்றுள்ளன.