Your cart is empty.
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
காதல், இருத்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூடா கவிதைகள், சலபதியின் நேர்த்தியான, நம்பகமான மொழிபெயர்ப்பில்...
காதல், இருத்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூட மேலும்
கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்ட மேலும்
சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராம மேலும்
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற மேலும்
டப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை மேலும்
உ.வே. சாமிநாதையர் ‘ஆனந்த விகட’னில் தொடராக எழுதிய நூலாயிற்று. பலமுறை அச்சாகியுள்ள இந்நூலின் செம்ப மேலும்
இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாள ராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கா மேலும்
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கர மேலும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ மேலும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை மேலும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளை மேலும்
கே. ஏ. குணசேகரனின் ‘வடு’ அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இரு மேலும்
காதல், இருத்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூடா கவிதைகள், சலபதியின் நேர்த்தியான, நம்பகமான மொழிபெயர்ப்பில்...
கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுதந்திரமான போக்கில் எழுதப்பட்டவை இவை. இந்த புனைவல்லாத எழுத்துக்களின் சிறப்பு, அவை முற்றிலும் மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பேசுபொருளாகக் கொண்டவை என்பதே. இதில் இடம்பெறும் மனிதர்கள் பெரும்பாலும் விசித்திரமானவர்கள் அல்லது அவர்களுக்கு வாய்க்கும் சூழல் விந்தையானது. இந்த விசித்திரர்கள் இயல்பான நடைமுறையை எப்படி விநோதமானதாக மாற்றுகிறார்கள் என்றும் விந்தையான சூழல், எளிய மனிதர்களை எவ்வளவு அபூர்வமானவர்களாக மாற்றுகிறது என்றும் நெருங்கியும் விலகியும் பார்த்து நுட்பமாக தீட்டுகிறார் ஜானகிராமன். அவரது புனைகதைகள் தரும் வாசிப்பு இன்பத்தை இந்த புனைவல்லாத எழுத்துக்களும் அளிக்கின்றன. இவை அவரது கலை மேதமையின் சான்றுகள் கூட.
சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. ஓர் இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரியவருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவு கூரும்போது அந்த ஊரும் அந்நாளைய மனிதர்களும் அந்தக் காலகட்டமும் மீண்டு வருகிறது. சுந்தர ராமசாமியின் மனைவியான பின்னர் நாகர்கோவில் வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் நேர்த்தியுடன் மீட்டெடுக்கிறார். சு.ராவின் இலக்கியச் செயல்பாடுகளும் தனி வாழ்க்கை அக்கறைகளும் கமலாவின் வருகையால் செழுமைபெற்றதை மிகையற்ற விவரங்களாக நாம் வாசிக்கிறோம். கடம்போடுவாழ்வைச் சேர்ந்த ஒரு வெகுளிப் பெண் நம் காலத்தின் பெரும் இலக்கிய ஆளுமையின் சக உயிராக மாறும் அமைதியான விந்தையை இயல்பாகக் காண்கிறோம். தமிழ் இலக்கியச் சூழலில், செல்லம்மா பாரதியின் நூலுக்குப் பிறகு இலக்கியவாதியான கணவரைப்பற்றி மனைவி எழுதிய நூல் இந்த நூலாகவே இருக்கலாம்.
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த நூலில். இயற்கைச் சூழலில் வாழும் மிருகங்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. 1958இல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பல திருத்தங்கள், குறிப்புகளுடன் மறுபிரசுரம் பெறுகிறது.
டப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடந்தது. எழுச்சியில் பங்கு பெற்றவர்கள் ஐரிஷ் குடியரசை அமைக்க விரும்பினார்கள். பிரிட்டன் அப்போது முதல் உலகப் போரில் சண்டை செய்துகொண்டிருந்ததனால் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணினர். பிரிட்டனின் எதிரியான ஜெர்மனியின் உதவியையும் எதிர்பார்த்தனர். எழுச்சியின் ஆரம்ப நாட்களில் ஐரிஷ் போராளிகளின் கை ஓங்கியிருந்தது. ஆனால் பிரிட்டனின் ராணுவ பலத்திற்கு முன்னால் அவர்களால் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எழுச்சியின் முக்கியத் தலைவர்கள் பிடிக்கப்பட்டு மரண தண்டனையைச் சந்தித்தார்கள். எழுச்சி நடந்த நாட்களில் டப்ளினில் இருந்தவர் எழுத்தாளர் ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸ். அவர் தெருத்தெருவாகச் சென்று எழுச்சி முதலில் வலுப்பெற்று பின்னர் முழுவதும் அடங்குவதைப் பார்த்தவர். அவருடைய மறக்க முடியாத பதிவு இது. ‘டப்ளின் எழுச்சி’ இன்றும் புதிதாக இருக்கிறது.
உ.வே. சாமிநாதையர் ‘ஆனந்த விகட’னில் தொடராக எழுதிய நூலாயிற்று. பலமுறை அச்சாகியுள்ள இந்நூலின் செம்பதிப்பு இது. இதழில் வெளியான தொடரின் மூல வடிவு, அதில் இடம்பெற்ற படங்கள், அரிய தேடலால் கிடைத்த புதிய படங்கள், ‘என் ஆசிரியப்பிரான்’ இணைப்பு, பொருளடைவு என இன்றைய வாசகருக்குப் பயன்படும் பல அம்சங்களை இப்பதிப்பு கொண்டிருக்கிறது. தன் வரலாற்றுக்கு வகைமாதிரியாக விளங்கும் இந்நூல் தமிழ்ப் புலமை வரலாறு, சமூக வரலாறு, கல்வி வரலாறு, உரைநடை வரலாறு, பதிப்பு வரலாறு உள்ளிட்டவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது. பல்வேறு நுட்பங்களையும் உள்ளடுக்குகளையும் கொண்டு பயில்வோருக்குப் புதுப்புதுக் கோணங்களைக் காட்டியபடி காலத்திற்கேற்பப் புதிதாகி மிளிர்ந்தகொண்டேயிருக்கும சிறப்புடையது இந்நூல். தமிழ் மறுமலர்ச்சி பெற்ற காலத்தில் ஆதாரப் பதிவுகளோடு மிக எளிதாகவும் ஆர்வத்துடனும் வாசிப்பதற்கேற்ற மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் தமிழ்ச் சாதனையாகிய இந்நூலை வாசிப்பது மட்டுமல்ல, இதனோடு உறவாடுவதும் தமிழர் கடமை. - பெருமாள்முருகன்
இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாள ராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின் கிறித்தவ மதபோதகரின் மகனாக இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டில் பயின்று, இந்தியப் பழங்குடிகளிடம் கிறித்தவ மறை பரப்பாளராக வந்து, காந்தியவாதியாக மாறி தம் மறைபரப்பும் பணியைத் துறந்தவர். ஆதிவாசிப் பெண்ணைத் திருமணம் செய்து புத்தசமயத்தைத் தழுவி இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டவர். போராட்டம் மிகுந்த இவரது வாழ்க்கை வரலாறே இந்நூல். நூலாசிரியர் ராமசந்திர குஹா இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நூலின் சுவை குன்றாதவாறு வேலு. இராஜகோபால் இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எல்வினின் சுயசரிதை, அவரது நாட்குறிப்புகள், நூல்கள் ஆய்வுக்கட்டுரைகள், அவருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தோரிடம் கேட்டறிந்த செய்திகள் என்பனவற்றின் துணையுடன் இந்நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறு எழுதப்புகுவோருக்கு முன்னோடியான நூலாக இது அமையும்.
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலம் காலமாகச் சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்? வெறியா? அகங்காரமா? வெறுப்பா? கசப்பா? ஆத்திரமா? சீற்றமா? எரிச்சலா? எது இவர்களைத் தூண்டுகிறது? எது இவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது? ஒரு பிறப்பையே கேவலம் என்று ஏளனம் செய்ய இவர்கள் யார்? பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளின் விளைவாக, சமூகத்தின் உடல் முழுக்கக் காய்ப்பேறிய தழும்புகள் மட்டுமே உள்ளன. ஒரே ஒரு அங்குலம்கூட அதன் உடல் பகுதி வெளியே தெரியாதபடி எங்கெங்கும் தழும்புகள். அரவிந்த மாளகத்தியின் எழுத்துகளில் இத்தகு தழும்புகளையே நாம் காண்கிறோம். எழுத்தும் படிப்பும் கைவரப் பெற்ற ஒருவரின் குறிப்புகளே இந்த அளவுக்கு நமக்குத் தலைகுனிவையும் நாணத்தையும் உண்டாக்கவல்லன எனில், படிப்பும் எழுத்தும் அறியாத பாமர ஜனங்கள் வாய்திறந்து பேசத் தொடங்கினால் நம் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டுவிட்டது என்று நம்பிவிட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர ராமசாமி. 1951இல் முதலில் வெளியான இந்நூலுக்கு விரிவான முன்னுரை, ஆய்வுக் குறிப்புகள், படங்களுடன் மறுபதிப்பைத் தயாரித்திருக்கிறார் புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்கியுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த அவருடைய ஈடுபாட்டுணர்வு இணையற்றது. தீவிரமான சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்ட பயணம் அது. அசாதாரணமான ஏற்றங்களும் சரிவுகளும் கொண்ட கருணாநிதியின் வாழ்வியக்கத்தைச் சார்பற்றும் புரிதலுணர்வுடனும் இந்நூலில் ஆராய்கிறார் வாஸந்தி.திருக்குவளையில் எளிய இசைக்குடும்பத்தில் பிறந்து, திரைத்துறை, இதழியல், மேடைப் பேச்சு, அரசியல், நிர்வாகம் ஆகியவற்றில் மிளிர்ந்த பன்முக ஆளுமையான கருணாநிதியின் பெருவாழ்வை அவரது இறுதிக்காலம்வரை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறது இந்நூல்.
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளையும் கடுமையான சரிவு களையும் கண்டவர்கள் அரிது. அவற்றுக்கு ஆதாரமான அவரது வாழ்க்கை சமநிலையில் நின்று எழுதப்படவில்லை. மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை - புகழ் மாலையை அல்ல - எழுதி யிருக்கிறார். உண்மையான பின்னணி, திரட்டிய தகவல்கள் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்கிறார். ஒரு இதழாளராக அவரது செயற்பாடுகளை வெளியரங்கில் வைப்பதுடன் படைப்பாளராக அவரது மனப்பாங்குகளையும் உணர்ச்சிகர மான போக்குகளையும் நெருங்கி விவரிக்கிறார்; அறிய எத்தனிக்கிறார். ஒரு பெண்ணாக ஜெயலலிதாவைக் கண்முன் கொண்டு வருகிறது இந்த வாழ்க்கை வரலாறு.
கே. ஏ. குணசேகரனின் ‘வடு’ அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்த போதிலும் தன்னைப் படிக்க வைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும்போதும், அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்திருந்த தனது தாய் சினிமாக் கொட்டகையில் டிக்கெட் கொடுத்து, விறகு வெட்டி விற்று, புல்லறுத்து விற்றுத் தங்களைக் காப்பாற்றியதைச் சொல்லும்போதும், காலை வேளைகளில் ஊறவைத்த புளியங் கொட்டைகளைத் தின்று பசியாறியதைச் சொல்லும்போதும் நம்மிடம் இரக்கத்தைக் கோராத, ஆனால் நம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற ஆற்றலைக் குணசேகரனின் மொழிபெற்றுள்ளது. இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ (1939) வெளிவந்த பிறகு தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் சுயசரிதை நூல் இது.