Your cart is empty.
சொற்களில் சுழலும் உலகம்
கண்ணீரின் சுவை கரிப்பல்ல; இனிப்பு என்று செல்வம் அருளானந்தம் அறிவித்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர் சொற்களின் ரசவாதி. தரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை, புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பவை மென்னகையில் உறைந்திருக்கும் கண்ணீரின் கதைகள். குருதி பிசுபிசுக்கும் அனுபவங்கள். - சுகுமாரன்


