Your cart is empty.
உண்மையும் பொய்யும்
வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம் மிக மிகத் தீவிரமானதுமான நூல் இதுவாக இருக்கலாம். ஒரு காலகட்டத்திய கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி - பதில்களில் அடங்கியிருக்கின்றன. வாசிக்கும்போது அவை கேரள வாழ்க்கை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.
பஷீர் புனைவுகளின் ஆதார குணங்களான மானுடக் கனிவும் அங்கதமும் நகைச்சுவையும் இந்த நூலிலும் இடம் பெறுகின்றன. அழுத்தமாகச் சொன்னால் புனைகதைகளைவிட இவை சுவாரசியமானவை. கூர்மையான பார்வை கொண்டவை. புனைகதைகளைத் தாண்டி பஷீரைப் புரிந்துகொள்ள உதவுபவை. கதையெழுதும் வைக்கம் முகம்மது பஷீரைவிட வாசகருடன் அரட்டையில் ஈடுபடும் வைக்கம் முகம்மது பஷீர் இன்னும் நெருக்கமானவர் என்பதற்குச் சான்று இந்நூல்.

