Your cart is empty.
யாக்கையின் நீலம்
கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக்கொண்டு வாழ்க்கை அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மேலும் செறிவாக்க முற்படும் எழுத்து முயற்சி. சொல்லின்மூலம் குறிப்பிட்ட அனுபவத்தை, வாதத்தை, தர்க்கத்தை, நியாயத்தை, உணர்ச்சியை, எண்ணக்குமுறலை, கட்டுக்குள் கொண்டுவர முடியும். அப்படிக் கொண்டுவருவது அவசியம். சொற்களுடன் போராடுகையில் கைகூடும் துயரமும் இன்பமும் இயலாமையும் களிப்பும் அவையளவில் ரசிக்கத்தக்கவை. ரேவதியின் கற்பனையும் கவித்துவமும் சொற்களின் மகத்துவத்தையும் போதாமையையும் ஒருசேரப் பேசுகின்றன.