Your cart is empty.
ஆற்றூர் ரவிவர்மா
நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற்றிய கவிதைகளும் அவருடைய தமிழ்ப் பார்வையும் அவர் மீதான தமிழ்ப் பார்வையும் கொண்ட கட்டுரைகள் இடம்பெறுகின்றன. மலையாள மொழியின் தமிழ்க் காதலருக்கான காணிக்கை இந்நூல்.