Your cart is empty.
ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகள் தற்செயலாக நடக்கின்றன. முடிச்சுகள் சுலபமாக அவிழ்கின்றன. கதாபாத்திரங்கள் பழமைவாதம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் ஒரு மாயக் கதாபாத்திரம் தனக்கேயுரிய ஒரு கதை அமைத்துச் செல்கிறது. இந்திய உளவியலின் வரலாற்றுப் புதிர் அக்கதையினூடே செல்கிறது. வாசக இடைவெளியில் வெவ்வேறு சாத்தியங்களை இந்த நாவல் வாசகர்களுக்கு உருவாக்கித் தருகிறது.



















