Your cart is empty.
ஜானு
-
To get 30.00% discount on Clearance sales off Buy 1 more product from Clearance sales off
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்த மேலும்
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை மேலும்
இலக்கியத்தில் பரிசோதனைகளும் மாறுபட்ட வகைமைகளை உருவாக்கும்
முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்ற மேலும்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள் மேலும்
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவா மேலும்
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும்
சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச் சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மேலும்
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரம மேலும்
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்தின் ரகசியங்களும், வாழ்வின் ரகசியங்களும், தம்மைப் புனைகதைகளாக இவரது மொழியில் எழுதிச் செல்கின்றன. வித்தியாசமான சூழலில், வித்தியாசமான மனிதர்கள், சிருஷ்டிகரமாக இக் கதைகளில் உருவாகியுள்ளார்கள் என்பதோடு, இக்கதைகளில் எழுத்தாளனின் பார்வையும் ஊடுருவியுள்ளது. இவரது ஒவ்வொரு தொகுப்பிலுள்ள கதைகளும், கதையமைப்பில் மாறுதல்களுடன் பயணம் செய்துகொண்டிருப்பதால், இத் தொகுப்பிலுள்ள கதைகளும், முந்தைய தொகுப்புகளிலுள்ள கதைகளிலிருந்து மாறுபட்டு, மேலும் மாறுதல்களைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கின்றன.
சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் (பி. 1953) ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரிய அக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில்...
ச. தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன் (பி. 1954) விருதுநகர் மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் கவிதை 1972இல் கோவில்பட்டியில் வெளியான ‘நீலக்குயில்’ என்ற இலக்கிய இதழிலும், முதல் சிறுகதை 1978இல் ‘தாமரை’ இதழிலும் வெளியாகின. கட்டுரை, சிறுகதைத் தளங்களில் இயங்கி வருபவர்; இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். ‘வெயிலோடு போய் . . .’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. சிவகாசியில் வசிக்கிறார்.
இலக்கியத்தில் பரிசோதனைகளும் மாறுபட்ட வகைமைகளை உருவாக்கும்
முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இறுக்கமான கதைக்
கட்டுமானங்கள், படிமங்களால் ஆன மொழி, சுருள் அடுக்குகளாக உருப்பெறும்
கதையாடல் எனப் பல்வேறு பரிசோதனைகள் உலக அளவிலும் தமிழிலும்
நிகழ்த்தப்பட்டுவருகின்றன. இத்தனைக்கும் மத்தியில் எளிய, நேரடியான
கதைகூறும் பாணி வழக்கொழிந்துவிடாமல் தன் அழகையும் அற்புதத்தையும்
தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மகத்தான இலக்கிய அனுபவத்தையும்
தருகிறது.
நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி
எளிய கதைகூறல் முறையில் எழுதிய கதைகளில் தேர்ந்தெடுத்த சில இந்தத்
தொகுப்பில் உள்ளன. புனைவில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்திருக்கும்
சுந்தர ராமசாமி நேரடியாகக் கூறியிருக்கும் கதைகள் இவை. எளிய
வடிவத்திலும் காத்திரமான இலக்கிய அனுபவத்தை வழங்க முடியும்
என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக இவை திகழ்கின்றன.
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. (முன்னுரையிலிருந்து)
ஆதவன்
கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். இந்திய ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றியபின் தில்லியில் உள்ள ‘நேஷனல் புக் டிரஸ்’டின் தமிழ்ப் பிரிவில் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ஆதவன், தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இவர் எழுதிய ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அக்காதெமி (1987) விருது வழங்கப்பட்டது. இவரது பலப் படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்ய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. மனைவி: ஹேமலதா சுந்தரம் மக்கள்: சாருமதி, நீரஜா
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது.
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். தான் வாசித்த ஒரு நூலை முன்வைத்துத் தன்னுடைய இலக்கிய மேதமையைப் பறைசாற்றிக்கொள்ளும் போக்கு மதிப்புப் பெற்றுவரும் ஒரு காலகட்டத்தில் நூலை முன்னிறுத்திப் பேசும் அசோகமித்திரனின் கட்டுரைகள் பெரும் ஆறுதல் அளிக்கின்றன. உணர்ச்சிவசப்படாமல் நூல்களை அசோகமித்திரன் அறிமுகப்படுத்துகிறார். படைப்புகளைக் காலத்தின் பின்னணியில் பொருத்திக்காட்டுகிறார். சிறப்புகளை மிகையின்றிச் சொல்கிறார். போதாமைகளைக் கூடியவரை நுட்பமாகச் சொல்லும் அசோகமித்திரன், ஒரு சில இடங்களில் வெளிப்படையாகச் சொல்லும்போதும் காரமான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. எந்த ஒரு நூலைப் பற்றியும் ஒவ்வொருவரும் தன்னுடைய வாசிப்பின் மூலம் முடிவுக்கு வர வேண்டும் என்று நம்பும் அசோகமித்திரன் தன் வாசிப்பின் முடிவுகளை வாசகர்களிடத்தில் திணிக்காமல் நூல்களைப் பற்றிப் பேசுகிறார். எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் கலாபூர்வமான, கச்சிதமான சொற்சித்திரங்களாக உருப்பெற்றிருக்கின்றன. பல சித்திரங்கள் சிறுகதைக்கு இணையாக உள்ளன. படைப்பாளிகளின் தனிப்பட்ட ஆளுமைகளைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் படைப்பைப் பற்றிய தன் பார்வையையும் இயல்பாக அதில் இணைத்துவிடுகிறார். எளிய கோடுகளால் ஆன இந்தச் சித்திரங்கள் அழிக்க முடியாமல் மனத்தில் பதிந்துவிடக்கூடியவை.
சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச் சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மதிப்பை இழக்காதவர் ஜீவா. தான் சார்ந்த இயக்கத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டியிருந்த சு.ரா.வின் நட்பு ஜீவாவுக்குத் தேவையாகவே இருந்தது. தன்னுடைய கொள்கைகளை எவர் மீதும் திணிக்காமலும் அதே சமயம் அவற்றை விட்டுக்கொடுக்காமலும் தோழமையைத் தக்கவைத்துக்கொண்ட ஜீவாவின் கம்பீரத்தை சு.ரா. பதிவுசெய்கிறார்.
--இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை.
எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் சு.ரா.வின் ஆளுமை இந்த நேர்காணல்களில் வெளிப்படுகிறது. சிந்தனையின் வீச்சும் ஆழ்ந்த கரிசனமும் கூடியவரை பிரச்சினையின் அனைத்துக் கோணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையும் சு.ரா.வின் கருத்துலகின் அடிப்படைகள். அவற்றை இந்த நேர்காணல்களிலும் காணலாம். சு.ரா. முன்னிறுத்தும் வாழ்வின் விழுமியங்களுக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் உணரலாம்.
மிகையற்ற, சுய பிம்பக் கட்டமைப்பில் நாட்டமற்ற, அசல் சிந்தனைகளைக் கொண்ட இந்த உரையாடல்களில் கேட்கும் உண்மையின் குரல் இந்த நேர்காணல்களைத் தனித்துக் காட்டுகிறது
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க கதைகளை எழுதவல்லவராக மிளிர்கிறார். மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து விடுகிறார்.
தனது கதையுலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும், படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு ஊட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும், பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே கார்த்திக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன். ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின் அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி. மொழியும் படைப்பாளனும் பிரகாசிக்கட்டும்!