Your cart is empty.
அமைதியின் நறுமணம்
இந்தியப் படைகளுக்கு மணிப்பூரிலும் வேறு சில பகுதிகளிலும் 1958 AFSPA சட்டப்படி சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இது ஒரு கொடுமையான சட்டமாகக் கருதப்படுகிறது. இதை அகற்றிவிட வேண்டும் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: அம்பை |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | கவிதைகள் | மொழிபெயர்ப்புக் கவிதைகள் |
இந்தியப் படைகளுக்கு மணிப்பூரிலும் வேறு சில பகுதிகளிலும் 1958 AFSPA சட்டப்படி சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இது ஒரு கொடுமையான சட்டமாகக் கருதப்படுகிறது. இதை அகற்றிவிட வேண்டும் என்பதுதான் ஷர்மிலாவின் கோரிக்கை. இதற்காகக் கடந்த பத்து ஆண்டுகளாக - நவம்பர் 4, 2000 முதல் - ஷர்மிலா மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஷர்மிலாவை உயிருடன் வைத்திருக்க அவர் மூக்கில் புகுத்தப்பட்ட குழாய் மூலம் வற்புறுத்தி அவருக்கு உணவு ஊட்டப்படுகிறது. இந்த வித்தியாசமான போராட்டம் வட கிழக்குப் பகுதிகளில் போராடிவரும் பலருக்கு ஒரு சக்திவாய்ந்த சின்னமாகிவிட்டது. ஷர்மிலாவுக்கு இளம் வயதுப் பெண்கள் விரும்பிப் போற்றும் சில விஷயங்களுக்கான ஏக்கங்கள் உண்டு : காதல், சுதந்திரம், ‘சுதந்திரமான’ வாழ்க்கையை வாழும் இயல்பான மகிழ்ச்சி, வெகு சாதாரணமான விஷயங்களான நீர் பருகும் அனுபவம், பல்லைத் தேய்க்கும் சுகம் இவற்றுக்கான ஏக்கம். மைதைலான் மொழியில் எழுதப்பட்ட இதிலுள்ள கவிதைகள், தனியாகப் போராடும் ஒரு பெண்ணின் வலியுடன் கூடிய ஊமைக்காயங்களைச் சொல்பவை.
ISBN : 9789380240299
SIZE : 13.9 X 0.3 X 21.5 cm
WEIGHT : 82.0 grams
Sharmila’s poems tell about the painful wounds of an ordinary women who fights alone. One can easily feel the fragrance of peace in these poems.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்














