Your cart is empty.
அறம் பொருள் இன்பம் வீடு - மகிழ்ச்சியாக வாழ 40 வழிகள் (இ-புத்தகம்)
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் சிந்தனை இந்து மதத்தின் மிகத் தொன்மையான கருத்தாக்கங்களில் ஒன்று. காலந்தோறும் இவற்றின் வெளிப்பாடுகளும் விளக்கங்களும் மாறிவந்தாலும் ஆதாரமான பார்வைகள் மாற்றமின்றித் … மேலும்
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் சிந்தனை இந்து மதத்தின் மிகத் தொன்மையான கருத்தாக்கங்களில் ஒன்று. காலந்தோறும் இவற்றின் வெளிப்பாடுகளும் விளக்கங்களும் மாறிவந்தாலும் ஆதாரமான பார்வைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. வேதகாலம் முதல் இன்று வரை இந்த நான்கு அம்சங்கள் என்னவாக இருந்துவருகின்றன என்பதைக் கூறுகிறது இந்த நூல்.
அர்த்த சாஸ்திரம் வளங்களை உற்பத்தி செய்வதைப் பற்றியது. காம சாஸ்திரம் இன்ப நுகர்ச்சியைப் பற்றியது. தர்ம சாஸ்திரம் பிறருடைய பசியை நாம் கவனிக்க வேண்டும் என்கிறது. மோட்ச சாஸ்திரம் நமது பசியைத் துறந்து பற்றுக்களைக் களைவது பற்றிப் பேசுகிறது. இந்த நான்கும் இணைந்து மானுட வாழ்வுக்கான சட்டகத்தை உருவாக்கி அதற்கு நோக்கத்தையும் பொருளையும் வழங்குகின்றன.
இந்துப் புராணங்களையும் இந்திய மரபுகளையும் ஆழ்ந்து கற்றவரான தேவ்தத் பட்நாயக் இந்து சிந்தனை முறையைப் பற்றிய தெளிவான பார்வையை, நவீன அறிவின் வெளிச்சத்தில் கச்சிதமாகவும் சுவையாகவும் முன்வைக்கிறார்.
ISBN : 9789355239228
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
காந்தியின் தன்வரலாறு (இ-புத்தகம்)
‘சத்திய சோதனை’ எனப் பரவலாக அறியப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தன்வரலாறு தமிழுக்குப் புதித மேலும்
புத்ர (இ-புத்தகம்)
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம் மேலும்













