Your cart is empty.
பாரதி செல்லம்மா
₹690.00
-பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் … மேலும்
-பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.
‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.
ISBN : 9789361106644
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 635.0 grams
கார்த்திக் புகழேந்தி
22 Oct 2025
ராஜம் கிருஷ்ணன் எழுதிய
‘பாரதி செல்லம்மா’ நூலைப் பற்றிய பார்வை
“பாரதி பற்றி இதுவரை வாசித்து உருவான பல மனப்பதிவுகள் அத்தனையையும் காலி செய்து, ஒரு முழுமையான விரிவான வாழ்வையும் செல்லம்மாள் பாரதியைப் புரிந்துகொள்வதற்கான வாசலையும் திறந்து வைத்திருக்கிறது இந்தப் புத்தகம்.
சம்பவங்களின் காலகட்டத்துக்கே சென்று, நிஜ கதாபாத்திரங்களின் அணுகல்களுடன், புனைவுக்குள் பெரும் மாயம் நிகழ்த்தியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.”
நன்றி: கார்த்திக் புகழேந்தி (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/photo/?fbid=24675481212072752&set=a.119983258049222














