Your cart is empty.


எல்லாம் இழந்த பின்னும்
-புலம்பெயர் படைப்புகளில் நினைவுகளும் ஏக்கங்களும் நிறைந்திருப்பது இயல்புதான். யாழ்ப்பாணத்தில் … மேலும்
-புலம்பெயர் படைப்புகளில் நினைவுகளும் ஏக்கங்களும் நிறைந்திருப்பது இயல்புதான். யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 வயதில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த சாந்தினி வரதராஜனின் கதைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இவரது கதைகளில் வீடும் ஊரும் அம்மாவுமெனக் கவலைகள் நிறைந்து வழிகின்றன. ஏணியின் உச்சத்தில் வாழ்ந்த வாழ்க்கையை மலைப்பாம்பொன்று விழுங்கிப் பூச்சியத்தில் தள்ளிவிட்டது போலான புலம்பெயர் வாழ்க்கையை எழுத்தில் வெளிப் படுத்தும்போது வேதனைகளின் வெளிப்பாடுகளாக அவை அமைவது தவிர்க்க இயலாதது. எனினும் இந்த வேதனைகள் வெறும் புலம்பல்களாக அல்லாமல் படைப்பூக்கத்துடன் வாழ்க்கையை விசாரிப்பதை இக்கதைகளில் உணரலாம்.
ஒருவர் எங்கு நடந்தாலும் எல்லாப் பாதைகளிலும் உதிர்ந்து கிடக்கும் நினைவுகளின் தடங்களே இந்தக் கதைகள்.
ISBN : 9789361103278
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 180.0 grams