Your cart is empty.
என் பயணம்
₹200.00
--மேலும்
--தமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அசோகமித்திரனின் 19 ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், அலங்காரம் தவிர்த்த நடை, தனித்துவமான பார்வை என அசோகமித்திரனின் சிறப்பம்சங்கள் இந்த நூலிலும் அழுத்தமாகக் காணப்படுகின்றன.
இதிலுள்ள கட்டுரைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை என்பது இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.
ISBN : 9789361105197
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 250.0 grams
Zhakaram Zhakaram
25 Jun 2025
“அசோகமித்திரனின் எழுத்து நடை நுண்ணறிவும் நுட்பமாகச் சிந்திக்கச் செய்யும் ஆழமும் கொண்ட ஒன்றாகும். அவர் பயன்படும் வார்த்தைகள் மிக எளிமையானவை; ஆனால் அவற்றுக்குள் மறைந்திருக்கும் கருத்துகள் மிகவும் ஆழமானவை.
‘என் பயணம்’ ஒரு எழுத்தாளரின் குரல் மட்டுமல்ல, ஒரு மனிதரின் பயணம். அனுபவங்களின் ஆழமான பகிர்வு. வாசகனாக நீங்கள் இந்த நூலை எடுத்தால், அது உங்கள் வாழ்வைப் பற்றிய பார்வையை வேறு கோணத்தில் காட்டும்.
அசோகமித்திரன் எளிய மொழியால் உயர்ந்த சிந்தனையைப் பதிவுசெய்யும் அதிசயக் கலைஞன். அவரது இந்த நூல் அந்த உண்மையை மீண்டும் நிரூபிக்கிறது.”
நன்றி: கவிஞர் ழகரம் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/photo/?fbid=1824468611754625&set=pb.100025745104274.-2207520000














