Your cart is empty.
காந்தியின் தன்வரலாறு -சத்திய சோதனையின் ஆய்வுப் பதிப்பு
-‘சத்திய சோதனை’யின் இந்த ஆய்வுப் பதிப்பின் பதிப்பாசிரியரான திரிதீப் சுஹ்ருத். காந்திய அறிஞர். … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுனில் கிருஷ்ணன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | தன்வரலாறு |
-‘சத்திய சோதனை’யின் இந்த ஆய்வுப் பதிப்பின் பதிப்பாசிரியரான திரிதீப் சுஹ்ருத். காந்திய அறிஞர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாறை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர்.
சத்திய சோதனை நூலிலுள்ள பல்வேறு நிகழ்வுகள் குறித்த கூடுதல் தகவல்கள், அவற்றின் பின்னணி சார்ந்த குறிப்புகள், குஜராத்தி மூலத்திற்கும் ஆங்கில மொழியாக்கத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் கொண்ட விரிவான பதிப்பு இது. குஜராத்தியில் காந்தி எழுதியதை, காந்தியின் மேற்பார்வையில் செய்யப்பட ஆங்கில மொழியாக்கத்துடன் ஒப்பிட்டு நோக்குகிறது என்ற வகையில் இந்த நூல் தனித்துவமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. காந்திக்கு வந்த கடிதங்களையும் தேவையான இடங்களில் அடிக்குறிப்பில் அளித்திருக்கிறார் திரிதீப் சுஹ்ருத்.
காந்தியின் தன்வரலாறுக்குத் தனித்த இலக்கிய மதிப்பும் இடமும் உண்டு. காந்தியை அவரது மனப் போராட்டங்களுடன் நமக்கு நெருக்கமாக அது அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய மொழியாக்கம் காந்தியை மேலும் நெருக்கமாக நமக்கு அறிமுகப்படுத்தும்.
ISBN : 9789361103803
SIZE : 14.0 X 5.0 X 16.0 cm
WEIGHT : 980.0 grams
SuneelKrishnan
15 Oct 2025














