Your cart is empty.


இன்று
நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலும் நாவல் அதைத் … மேலும்
நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலும் நாவல் அதைத் தாண்டியும் பயணிக்கிறது. சமகாலத்து நிகழ்வுகளுக்கான மனிதர்களின் எதிர்வினைகளை நுட்பமாகப் பதிவுசெய்யும் இந்த நாவல், வாழ்வின் அடிப்படையான அம்சங்கள் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. லட்சிய வேகம், அர்ப்பணிப்பு மிகுந்த செயலூக்கம், தத்துவத் தேடல் ஆகியவற்றின் பொருள் என்ன என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்பித் தன் போக்கில் விடையையும் தருகிறது. வாழ்வனுபவங்கள், கருத்து நிலைப்பாடுகள், தத்துவ விசாரங்கள், லட்சிய உணர்வு கொண்ட செயல்பாடுகள் ஆகியவற்றின் சித்திரங்களாக உருக்கொள்ளும் இந்த நாவல் பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு என்னும் மயக்கத்தைத் தரக்கூடியது. இந்தச் சித்திரங்களின் அடிச்சரடைக் கண்டடையும் வாசகர் நாவலுக்குரிய தரிசனத்தையும் அதில் அடையாளம் காண முடியும். தமிழ் நாவல் வடிவத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்திய வெற்றிகரமான பரிசோதனைகளில் ஒன்று என இந்நாவலைத் தயங்காமல் சொல்லலாம். வடிவ ரீதியில் மட்டுமல்லாமல், பேசப்படும் பொருள் சார்ந்தும் தன் முக்கியத்துவத்தைக் கால ஓட்டத்தில் சற்றும் இழக்காத நாவல் இது. எழுதப்பட்ட காலத்தின் சமகாலம் என்பது, வாசிக்கப்படும் காலத்தின் சமகாலமாகவும் தோற்றம் கொள்ளக்கூடிய ரஸவாதம் அசோகமித்திரனின் கலையால் சாத்தியமாகியிருக்கிறது.
அசோகமித்திரன்
இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார் மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப் பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக் கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789388631013
SIZE : 13.8 X 0.4 X 21.5 cm
WEIGHT : 121.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
காயாம்பூ
“குழந்தைகள் . . ?” என்னும் கேள்விக்கு “இல்லை” என்று சொல்லி மெல்லியதாகப் புன்னகைக்கும் பெண்கள் பல மேலும்
அத்தைக்கு மரணமில்லை
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் மேலும்
சித்தன் சரிதம்
இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் ‘சித்தன்சரிதம்’ ஆறுதலை முறையின் கதையை மட்டும மேலும்
வெயில் நீர்
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ள மேலும்
ஆலவாயன்
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவா மேலும்
அர்த்தநாரி
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவா மேலும்
ஆகாயத் தாமரை
ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை‘யாக விரி மேலும்
புகை நடுவில்
பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக மேலும்
உயிரின் யாத்திரை
அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும மேலும்
மூன்றாம் சிலுவை
விஜயராகவனுக்கு இரு மனைவியர்; 3 மகள்கள். அவராக வரித்துக் கொண்ட இந்த உறவுகளைக் கடந்து மூன்றாவதாக வ மேலும்
நட்டுமை
காலச்சுவடு அறக்கட்டளையின் ‘சுந்தர ராமசாமி - 75’ கவிதை, இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நா மேலும்
ஆதிரை
காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவ மேலும்
கொல்வதெழுதுதல் 90
1990 காலப் பகுதிகளில் இலங்கையின் போர்க்காலப் பகைப்புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத் தளத்த மேலும்