Your cart is empty.
இரவுக்கு முன்பு வருவது மாலை
மனித மனத்தின் நுட்பமான அடுக்குகளைத் துல்லியமாகச் சித்தரிக்கும் ஆதவன் ஆண் பெண் உறவு நிலைகளையும் பல கதைகளில் நுணுகி ஆராய்கிறார். ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’ குறுநாவலும் … மேலும்
மனித மனத்தின் நுட்பமான அடுக்குகளைத் துல்லியமாகச் சித்தரிக்கும் ஆதவன் ஆண் பெண் உறவு நிலைகளையும் பல கதைகளில் நுணுகி ஆராய்கிறார். ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’ குறுநாவலும் அத்தகையதொரு படைப்பு.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல் வழி நகரும் இந்தக் கதை ஆண் பெண் உறவுச் சிக்கல் குறித்த இருவரின் மனவோட்டங்களை அலசிக் கேள்விகளை முன்வைக்கிறது. அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் பாவனை விளையாட்டை அபாரமான புனைவு மொழியில் சித்தரிக்கும் ஆதவன் அதன் மூலம் அவர்களின் பின்புலங்கள், கண்ணோட்டங்கள், ரகசிய வேட்கைகள் ஆகியவற்றைச் சொல்லாமலேயே உணர்த்திவிடுகிறார். பாவனை விளையாட்டின் வழியே மன அடுக்குகளில் படிந்திருக்கும் இருண்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
அவர்களுக்கிடையிலான உறவு இரவுமல்லாத பகலுமல்லாத மாலையைப் போலவே விளிம்பு நிலையில் ததும்புவதைக் காட்டியபடி முடிகிறது இந்தக் குறுநாவல்.
எழுதி ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் படைப்பு இது.
ISBN : 9789355239648
PAGES : 0