Your cart is empty.


இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை (இ-புத்தகம்)
பிரெஞ்சுப் பொருளாதாரச் சிந்தனையாளர் தொமா பிக்கெத்தியின் கருத்துகள் இன்று பல்வேறு தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஆராயும் இந்நூல் அவற்றைச் சமன்படுத்தும் வழிவகைகள் … மேலும்
பிரெஞ்சுப் பொருளாதாரச் சிந்தனையாளர் தொமா பிக்கெத்தியின் கருத்துகள் இன்று பல்வேறு தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஆராயும் இந்நூல் அவற்றைச் சமன்படுத்தும் வழிவகைகள் பற்றிய புதிய பார்வையொன்றை முன்வைக்கிறது.
இதில் ஆசிரியரின் தனித்துவமும், பன்முகச் சிந்தனையும் வெளிப்படுகின்றன. பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமே தொமா பிக்கெத்தி தம் கருத்துகளுக்கு அடித்தளமாக அமைத்துக் கொள்ளவில்லை; சமூகவியல், வரலாறு ஆகியவற்றையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார். இவரது வரலாற்றுப் பார்வை இரண்டு மூன்று நூற்றாண்டுகள்வரை பின்னோக்கி நீள்கிறது. காலனி ஆதிக்கம்பற்றிப் பேசும்போது இவரிடம் சமூகவியல் பார்வையும் இருப்பதைக் காணலாம். தொமா பிக்கெத்தி 21ஆம் நூற்றாண்டில் எண்ணியல் வழி கிடைக்கும் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார். பொருளாதாரத் துறையில் இனிவரும் ஆய்வுகளுக்கு உதவும் வகையில் வழிமுறைகள் வகுக்கப் பட்டிருப்பதும் இந்நூலின் கூடுதல் சிறப்பாகும்.
ISBN : 9789355239303
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஃபிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம்: பாதையும் பயணமும் (1945-1954) (இ-புத்தகம்)
புதுச்சேரியின் வரலாற்றையும் அதன் பண்பாட்டுச் செழுமையையும் அறிந்துகொள்வதற்கான ஆதாரப்பூர்வமான விரிவ மேலும்
அறம் பொருள் இன்பம் வீடு - மகிழ்ச்சியாக வாழ 40 வழிகள் (இ-புத்தகம்)
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் சிந்தனை இந்து மதத்தின் மிகத் தொன்மையான கருத்தாக்கங்களில் ஒ மேலும்