Your cart is empty.


காதல் சரி என்றால் சாதி தப்பு
-கல்விப் பிரச்சினைகள் சார்ந்து அனுபவ அடிப்படையில் தொடர்ந்து … மேலும்
இந்த புத்தகத்தின் இ-புத்தக பதிப்பை வாங்க
இ-புத்தகம் விலை : ₹ 150.00
-கல்விப் பிரச்சினைகள் சார்ந்து அனுபவ அடிப்படையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர் பெருமாள்முருகன். ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’, ‘மயிர்தான் பிரச்சினையா?’ ஆகியவற்றின் வரிசையில் இடம்பெறும் நூல் இது. அரசு கலைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்து அனுபவங்கள் பல இந்நூலில் கட்டுரைகள் ஆகியுள்ளன. மாணவர்களையும் ஆசிரியர்களையும் உற்று நோக்கித் தம் பார்வையில் பகுத்தாய்ந்து எழுதியுள்ளார். நடைமுறையைக் கணக்கில் எடுக்காமல் கோட்பாட்டு அடிப்படையில் கல்வியைப் பேசுவோர் பலர்; அவர்கள் நமக்கென இருக்கும் தனித்தன்மையான பிரச்சினைகளை நழுவ விடுகிறார்கள். கோட்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல் நடைமுறைப் பிரச்சினைகளை மட்டும் மேலோட்டமாகப் பேசுவோரும் உண்டு. அவர்கள் தம்மைக் காத்துக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள். இக்கட்டுரைகள் நடைமுறை அனுபவங்களோடு கல்விக் கோட்பாட்டுப் பார்வைகளை நூலிழையாக இயைத்துச் செல்கின்றன.
ISBN : 9789361109386
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 225.0 grams