Your cart is empty.
-குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, எழுத்தாக, இசைப் பாடலாக, நாடகமாக உருமாறும். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதன் வழியாக நாமும் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளின் முன்னால் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்கும் கணங்களில் நிகழும் மாயம் இது. அந்த மாயக் கணங்களை இந்நூல் தரிசிக்க உதவும்.
அவிலா டீச்சர் என்னும் மழலையர் பள்ளி ஆசிரியையின் அனுபவங்களைப் பதிவுசெய்யும் இந்த எழுத்து, கற்றுக் கொடுத்தல் என்பது பாடம் எடுப்பது மட்டுமல்ல என்பதைச் சொல்கிறது. அவிலா டீச்சருக்கும் அவரிடம் பயிலும் குழந்தைகளுக்கும் இடையில் நிகழும் அதிசயக் கணங்களை, மழலைகளின் உரையாடலைக் கதைபோலச் சொல்லியிருக்கிறார் அவிலா டீச்சரின் கணவரும் மெல்லிசைக் கலைஞருமான எழுத்தாளர் ஜான் சுந்தர்.
ISBN : 9789361101083
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 150.0 grams
பாவண்ணன்
9 Mar 2026
சரவணன் மாணிக்கவாசகம்
21 Feb 2026
சக்திவேல் பொ (பார்வையற்றவன் முகநூல் பக்கத்திலிருந்து)
19 Mar 2026
சரவணன் மாணிக்கவாசகம் (முகநூலிலிருந்து)
21 Feb 2026
பாவண்ணன் (bookday.in வலைதளத்திலிருந்து)
23 Feb 2026
மழலையர் பள்ளியில் தன் மகனைச் சேர்ப்பதற்காக வந்திருக்கும் ஒரு தாயோடு தொடங்குகிறது ஒரு சித்திரம். “மிஸ் ஏதாவது கேள்வி கேட்டா, நீ பதில் சொல்லணும் புரியுதா?” என்று சிறுவனுக்குப் பயிற்சி கொடுக்கிறாள். அந்த இளம்தாய். அவன் புன்னகை மாறாத முகத்துடன் மிகவும் பிடிவாதமாக “மாட்டேன்… சொல்ல மாட்டேன்” என்று மறுக்கிறான். அந்தத் தாயால் அச்சிறுவன் மனத்தை மாற்றவே முடியவில்லை. அதற்குள் அவர்கள் பெயர் அழைக்கப்பட்டுவிட இருவரும் எழுந்து டீச்சர் அறைக்குள் செல்கிறார்கள். சிறுவனின் பிடிவாதத்தை ஏற்கனவே அறிந்துகொண்ட டீச்சர் அவன் பக்கமே திரும்பாமல் அவன் அம்மாவிடம் மட்டுமே உரையாடத் தொடங்குகிறார். எல்லாமே அவனைப் பற்றிய கேள்விகள். ஆனால் அனைத்தையும் அந்தத் தாயாரிடமே கேட்கிறார். பிறகு சிறுவர்களிடம் கேட்பதுபோல சுவரில் தொங்கும் படங்களைச் சுட்டிக்காட்டி ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று கேட்கிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு பதிலுக்கும் அவருக்குப் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறார். தன்னைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன் தாயாரிடம் மட்டுமே பேசிச் சிரிப்பதைப் பார்க்கப் பார்க்க சிறுவனுக்கு ஏக்கமாக இருக்கிறது. தனக்குத் தெரிந்த பதில்களைச் சொல்ல வேண்டும் என்று அவன் துடிக்கிறான். அப்போதும் டீச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை. நேரம் கழியக் கழிய சிறுவனுக்கு ஆர்வம் பெருகுகிறது. ‘மிஸ்… நான் சொல்றேன் மிஸ்’ என்று அவனாகவே டீச்சர் கையைப் பிடித்துக் கெஞ்சத் தொடங்குகிறான். அவன் மனத்திலிருந்த தடை சட்டென ஒரே கணத்தில் உடைந்துவிடுகிறது. அருமையான சொற்சித்திரம்…
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
துடிமேளக்காரன் (இ-புத்தகம்)
சற்று முந்தியோ பிந்தியோ வந்தால் நாம் தவறவிட்டுவிடக்கூடிய குறுகிய தருணங்கள், உற்றுப் பார்த்தாலன்றி மேலும்
துடிமேளக்காரன்
-சற்று முந்தியோ பிந்தியோ வந்தால் நாம் தவறவிட்டுவிடக்கூடிய குறுகிய தருணங்கள், உற்றுப் பார்த்தாலன்ற மேலும்





