Your cart is empty.
அபாயம்
-அபாயம்
அணுவுலைக் கூடத்தில் பணியாற்றும் பென்ட்டிங், துபோன், மோலினார் மூவரும் கதிர்வீச்சால் பாதிக்கப்படுகிறார்கள். மரணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட இவர்கள் மருத்துவமனையில் உணர்கின்ற உடல் வேதனைகளை, மன நெருக்கடிகளை இந்தக் குறுநாவல் தீவிரத்துடன் விவரிக்கிறது. அன்றாட உலகத்தின் சாதாரண வாழ்க்கைக்காக மூவரும் ஏங்குகிறார்கள். வெவ்வேறான இயல்பும் எதிர்பார்ப்புகளும் கொண்ட இவர்களின் விதியோ ஒன்றாக இருக்கிறது. ஒருவனை மரணம் முன்னமே அழைத்துக்கொள்கிறது.
மற்ற இருவரும் அது தங்களை நெருங்கும் முன் மருத்துவமனையிலிருந்து வெளியேறிப் புறவுலகில் எங்கேனும் கண்காணா இடத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு விரும்புகிறார்கள். தப்பிச் சென்றும்விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குக் காத்திருப்பது என்ன? மனிதன் இன்று எதிர்கொள்ளும் அபாயம் அணுக்கதிர்வீச்சாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை; -அந்த அபாயத்தைச் செட்டான மொழியில் இறுக்கமாகச் சொல்லும் இக்குறுநாவல் நவீன வாழ்வின் அவலத்தை உணர்த்துகிறது.
