Your cart is empty.
காலச்சுவடு கதைகள்
-கடந்த நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தின் சிறுகதைப் போக்குகளுக்குச் சான்றாக இக்கதைகள் அமைந்துள்ளன. எதிர்காலத்தில் இவை புதிய போக்குகளை உருவாக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புமின்றி, சுதந்திரமான மனநிலையோடு எழுதப்பட்டவை இக்கதைகள். இன்று பரவலான கவனத்தைப் பெற்றுள்ள முதன்மையான படைப்பாளிகளின் கதைகளின் தொகுப்பு இது.
இக்கதைகள் 'காலச்சுவடு' இதழில் பிரசுரமான காலத்தில் வாசகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தீவிரமான சிந்தனைப் போக்குகளையும் உருவாக்கின. வாசிப்பில் புதிய சலனங்களையும் தீவிரத்தையும் பரவசத்தையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய இக்கதைகள், இப்போது புதிய பதிப்பாக வெளிவந்துள்ளன.
