Your cart is empty.


கதவு
-‘கதவுமேலும்
-‘கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்கின்றன.
கரிசல் வட்டார வழக்கை நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம்பெறச் செய்த முதல் தொகுப்பு இது.
குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், மரங்கள், மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகளின் வழியாகப் புதுவகையான கதைகளைச் சொல்கிறார் கி.ரா.
இக்கதைகளில் வரும் பாத்திரங்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் தோல்விகளும் தியாகங்களும் அரசியலும் அன்றாடமும் யதார்த்தத்தைச் சித்திரிக்கின்றன.
இளம் படைப்பாளிகள் பலருக்கும் இன்றளவும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும் தொகுப்பு இது.
ISBN : 9789361108884
SIZE : 14.0 X 0.5 X 21.0 cm
WEIGHT : 150.0 grams