Your cart is empty.
நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம் - ஒரு திருநங்கையின் போராட்டமான வாழ்க்கை
-இந்த நூலைத் … மேலும்
-இந்த நூலைத் தன்வரலாறு அல்லது நினைவுக்குறிப்பு என்று சொல்வதைவிட, ஒரு பெண் தனது அடையாளத்தையும் சமூகத்தில் தனக்கான இடத்தையும் கோருவதற்கான போராட்டத்தின் தீவிரமான, உணர்வுபூர்வமான விவரிப்பு என்று கொள்ளலாம். இந்த நூலின் வழியாக, திருநர் உரிமை ஆர்வலர், போராளி, சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் அக்கை பத்மசாலி சமூகத்தை நோக்கிய தனது போராட்டத்தை முன்வைக்கிறார். அனுதாபத்தையோ பரிதாபத்தையோ அவர் கோரவில்லை. சமூக ஏற்பையும் மரியாதையையும் கோருகிறார். நேர்மையுடன் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் அக்கையின் எழுத்து, ஒரு அரசியல் செயல்பாடாகும். இன்று இருக்கும் இடத்தை அடைவதற்காகத் தான் பட்ட வேதனை, அவமானம், குழப்பம், அவமதிப்பு, அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி என அனைத்தையும் வெளிப்படையாகக் கூறுகிறார். தனது கதை தன்னுடைய கதை மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகிறார்.
ISBN : 9789361101854
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 280.0 grams
சரவணன் மாணிக்கவாசகம்
26 Feb 2026
அக்கை பத்மசாலியின் ‘நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்’ தன்வரலாறு
…இந்நூல் பாலின ஒடுக்குமுறையை மட்டும் அல்ல, வர்க்கச் சிக்கல்களையும் வெளிக்கொணர்கிறது. வறுமை, பசி, பள்ளியில் அவமானம், தெருவாழ்க்கை அனுபவம் ஆகியவை பாலின ஒடுக்குமுறையுடன் இணைகின்றன. அக்கையின் முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, தனிப்பட்ட அனுபவத்தை சட்டப் போராட்டத்துடன் இணைப்பதே ஆகும். மேலும் இந்நூல் பெண்ணிய இயக்கங்களுடன் ஒரு விமர்சன உரையாடலை மேற்கொள்கிறது…
நன்றி: சரவணன் மாணிக்கவாசகம் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் இணையத்தில் வாசிக்க:
https://wp.me/pcj2AK-17I
முகநூலில் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1G1SKdJztX/
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பெண்ணுடலுக்கு ஒரு சாத்திரம்
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம மேலும்














