முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள்.
சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவருடையவை. ஊரும் உறவும் நகர வாழ்வில் எத்தகைய மாற்றங்களை அற்புதமாகவும் அழகாகவும் ஆனால் வலி மிகுந்ததாகவும் மாற்றுகின்றன என்பதை ஆழமான, அழகான கவிக்குரலுடன் கங்கா எம்மிடம் கொண்டுவருகிறார். கவிதைகளில் ஒலியும் எதிரொலியும் ஒன்றாகப் பின்னி வருகின்ற புதுமை அவர் கவிதைகளில் நிகழ்கிறது.
ISBN : 9789355235114
PAGES : 64
ரௌத்ரா (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
11 Mar 2026
"ஒருநாள் வாழ்வெனினும் பூத்துக்குலுங்கும் மலையாகும் வரம் " கேட்கும் இந்த கவிஞர் ... "படிக்க படிக்க நீண்டுகொண்டே எங்கே எப்போது முடியும் என்ற தவிப்புடன் வாழ்நாள் முழுதும் எதிர்பார்ப்புடனே அலைய விடும் படித்து முடிக்க இயலாது புத்தகம் நீ " ♥️என எழுதிய இந்த கவிஞரின் காதல் வரிகள் அத்தனையும் அருமையாக இருப்பினும் இவரின் தேநீர் பற்றிய வரிகள் என்னை தேநீர் பருகிடச்செய்தது ...
"தேநீரும் மையலும் ஆறிப்போனால் பெருகுவது கசப்பு " .... எதார்த்தங்கள் கவிவடிவம் பெற்றிருக்கின்றன .."அவளும் நானும்" என்ற வரிகள் எனக்கு ஏனோ ஆனந்தத்தை தான் தந்தது !
ஒன்று அல்லது இரண்டு தேநீர் இடைவேளைகளுக்குள் வாசித்துவிட முடியும் அளவான சிறிய புத்தகம் தான் ..💜