Your cart is empty.
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
-நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. … மேலும்
இந்த புத்தகத்தின் இ-புத்தக பதிப்பை வாங்க
இ-புத்தகம் விலை : ₹
-நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட்டும் செய்திகளைக் கொண்ட தொகுப்பு. கதைபோலச் சொல்லும் எளிய மொழி நடையும் மிகையற்ற சித்தரிப்புகளும் திரண்டிருக்கும் நூல் இது.
ISBN : 9788119034710
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 220.0 grams
மணி மீனாட்சிசுந்தரம் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்)
16 Dec 2024
அ.கா. பெருமாள் எழுதிய
“நித்தியவல்லியின் கடனக்கழிப்பு” நூலைப் பற்றி…
சொல்வதைச் சுவைபடச் சொல்லும் ஆய்வாளரின் எழுத்து நடைக்கும், நாட்டார் வாய்மொழி வழக்கு, நாட்டார் கலை அனுபவம் தொடர்பாக அவருக்குள்ள பரந்துபட்ட அறிவுக்கும் சான்றாகிறது இந்த நூல்.
நாட்டாரியலில் ஆர்வமில்லாத பொது வாசகர்களும் விரும்பிப் படிக்கும்படியாக நூலை தந்திருக்கிறது ஆசிரியரின் எழுத்துமுறை.
தமிழ்ப் பண்பாட்டை நாட்டார் கலைகளின் வழி புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல்.
நன்றி: மணி மீனாட்சிசுந்தரம் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்)
முழுக் கட்டுரையும் வாசிக்க: https://shorturl.at/5Ws6P














