Your cart is empty.
பாதி மலையேறுன பாதகரு
படைப்பு உருவான கதையை அறிந்துகொள்ள வாசகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். … மேலும்
படைப்பு உருவான கதையை அறிந்துகொள்ள வாசகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். படைப்பின் இரகசியத்தை அறிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆசை இருக்கிறது. படைப்பின் இரகசியம் தனக்கே தெரியாதபோது அதை எப்படிச் சொல்வது என்றே பெரும்பாலான படைப்பாளிகள் நினைக்கக்கூடும். என்றாலும் படைப்பு உருவாக்கம் பற்றிக் கேள்விகள் வரும்போது படைப்பாளிகள் அதற்கு விடையளிக்கத்தான் செய்கிறார்கள். அந்த விடைகளில் புதிய பார்வைகள் பிறக்கின்றன.
சமகாலத் தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான பெருமாள்முருகன் அத்தகைய கேள்விகளை எதிர்கொண்டதன் விளைவுதான் இந்த நூலில் உள்ள கட்டுரைகள். “புனைவில் காணும் வாழ்வு தரும் போதை போதுவதில்லை. அதை யதார்த்தத்தில் பொருத்திப் பார்த்தால் கொஞ்சம் நிறைவு ஏற்படும்போல” என்று சொல்லும் பெருமாள்முருகனின் இந்தக் கட்டுரைகள் படைப்பின் இரகசிய வாசல்களைத் திறந்து காட்டுவதுடன் நிறைவான வாசிப்பனுபவத்தையும் அளிக்கின்றன.
ISBN : 9789355236449
PAGES : 192