Your cart is empty.
பசியாறும் மேஜையில் (இ-புத்தகம்)
காலையுணவு என்பது துருக்கிய விருந்தோம்பும் பண்பாட்டின் முக்கிய அம்சம். இது ஒரு சமூக நிகழ்வு. காலையுணவு நேரத்தில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உணவு மேஜையில் ஒன்றிணைவது மரபு. … மேலும்
காலையுணவு என்பது துருக்கிய விருந்தோம்பும் பண்பாட்டின் முக்கிய அம்சம். இது ஒரு சமூக நிகழ்வு. காலையுணவு நேரத்தில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உணவு மேஜையில் ஒன்றிணைவது மரபு. நவீன வாழ்வின் பரபரப்புக்கு நேரெதிரான விதத்தில் நிதானமாக, உரையாடியபடியே ருசித்துச் சாப்பிடுவார்கள்.
இஸ்தான்புல் அருகேயிருக்கும் துருக்கித் தீவு பியூக்கதா. அங்கே வசிக்கும் ஷிரீன் ஸாகா பிரபல பெண் ஓவியர். இவருடைய நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ரமலான் விடுமுறை நாளின்போது பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தி ஆகியோர் கூடுகிறார்கள். பத்திரிகையாளன் புராக் காலையுணவுக்கு விருந்தினனாக அழைக்கப்படுகிறான். இந்தப் பிறந்தநாள் வைபவத்தின்போது காலையுணவு மேஜையில் நடக்கும் நிகழ்வுகளே நாவலின் மையக்கரு. ஷிரீன் ஸாகாவின் பிறப்பில் இருக்கும் மர்மம் இந்த உணவறையில் முடிச்சவிழ்கிறது. ஷிரீன் ஸாகாவின் வாழ்க்கையில் பொதிந்திருக்கும் மர்மத்தை அவிழ்க்கும் சாக்கில் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் நாட்டின் அவல வரலாற்றை இந்நாவல் சுட்டிக்காட்டுகிறது.
எத்திராஜ் அகிலனின் நேர்த்தியான மொழியாக்கத்தில் இந்த நாவல் தமிழுக்கு வந்திருக்கிறது.
ISBN : 9789355239402
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
புத்ர (இ-புத்தகம்)
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம் மேலும்
புதுமைப்பித்தன் களஞ்சியம்(இ-புத்தகம்)
புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் மறைவுக்கு அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகள்வரை அவ மேலும்













