Your cart is empty.
பொய்யுரு
-வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: பா. வெங்கடேசன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | நாவல் |
-வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவனது அனுபவங்கள், அத்தீவு சுற்றுச்சூழல் பன்மையத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வந்தேறிகளின் வாழ்க்கை என்று நகர்ந்து, கொள்ளை நோய்கள், மருத்துவம் என்று வெவ்வேறு கதைத் (துண்டு) தளங்களுக்கிடையே ஊடாடுகிறது.
இந்தக் கதைத்துண்டுகளின் தளம் பரந்தது. காலனியாதிக்கம், பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் பன்மைய அழிவு, கொள்ளைநோய்களின் தோற்றம், அவற்றுக்கான மருத்துவம், அதன் பின்னாலுள்ள அரசியல், மதங்களால் பீடிக்கப்பட்ட சமூகத்தின் கையறுநிலை என்று உலகளாவிய பிரச்சினைகளிலிருந்து தன் கதைக்கான துண்டுகளைத் தெரிவு செய்கிறது இக்குறுநாவல். அத்தனை துண்டுகளும் பிரதிபலிப்பது இவையனைத்தும் நிறைந்த நிஜத்தையும், அதைக் கண்டும் காணாமல் கடந்துபோகும் நம் வாழ்வின் நிதர்சனத்தையும்.
பொய்யுரு நாம் பார்க்கத் தவறும் பிரச்சினைகளைப் பரப்பிவைத்து நமது பார்வையை மாற்ற முயல்கிறது.
ISBN : 9789361101977
SIZE : 14.0 X 0.5 X 21.0 cm
WEIGHT : 110.0 grams
பா. திருச்செந்தாழை (முகநூலிலிருந்து)
23 Dec 2025
நிலத்தின் எல்லைகளை உடைக்கும் நாவல்
நூல் பரிந்துரை
… நாவல் துவங்கிய ஒரு சில பக்கங்களிலேயே நாவலின் ஒற்றைத்தன்மை மறைந்துவிடுகிறது. அடுத்தடுத்த பக்கங்களில் இந்த நாவலின் வழியே பர்ரோஸ் கிறிஸ்துவத்தை, மதத்தை, அரசை, காடுகளின் அழிப்பை பேசிச்செல்கிறார்…
…நாவலை வாசித்து முடித்ததும் தோன்றிய முதல் விசயம், ஒரு எழுத்தாளராக தனது சொந்த புனைவுவெளியில், ஒரு செயலுக்குக் காரணமான அத்தனை விதிகளையும் தனது வசீகரிக்கும் கற்பனையின் சாத்தியத்தில் துளிகூட மிச்சம் வைக்காது அத்தனையையும் எழுதிவிடும் பா.வெங்கடேசன் இந்த மொழிபெயர்ப்பின் இறுதியில் இதன் முடிவிலியான அம்சத்தை எவ்வாறு தனக்குள் அனுசரித்துக்கொண்டார் என்கிற எண்ணம்…
நன்றி: பா. திருச்செந்தாழை (முகநூலிலிருந்து)
முழுமையான பதிவுக்கு:
https://www.facebook.com/photo?fbid=2797423010648905&set=a.2777246562666550














