Your cart is empty.
ரசிகரும் ரசிகையும் (இ-புத்தகம்)
ஜானகிராமனின் இசைப் பார்வையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். ஒன்று இசை உலக மனிதர்களைப் பற்றிய விமர்சனம். இதைப் பெரும்பாலும் கிண்டலும் நையாண்டியும் கலந்த நகைச்சுவை உணர்வோடு விஸ்தரிப்பார். … மேலும்
ஜானகிராமனின் இசைப் பார்வையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். ஒன்று இசை உலக மனிதர்களைப் பற்றிய விமர்சனம். இதைப் பெரும்பாலும் கிண்டலும் நையாண்டியும் கலந்த நகைச்சுவை உணர்வோடு விஸ்தரிப்பார். அந்த விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அடுத்து, இசை உலகத்துடன் தொடர்புகொண்ட மனிதர்களைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள். இவையும் பெரிதாக மாறவில்லை.
ஜானகிராமன் இசையின் நுணுக்கங்களுக்குள் அதிகமாகப் போவதில்லை. எல்லாம் அனுபவம்தான். தான் கேட்ட இசையை அவர் விவரிக்கும்போது அந்த இலக்கிய நயமும் அழகியலும் நமக்கு அந்த இசையைக் கேட்ட முழு அனுபவத்தை அளிக்கின்றன.
தஞ்சை மாவட்டத்தின் காவிரிக் கரைக்கு நம்மை அழைத்துச் சென்று நல்ல காப்பியைக் கையில் கொடுத்து, பிலஹரியின் மேல் ஷட்ஜத்தில் லயித்துக்கொள்ளலாம் என்கிறார் தி. ஜானகிராமன்.
ISBN : 9789355238993
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நீதிக்கதைகள் (இ-புத்தகம்)
தொண்ணூறுகளின் இறுதியிலும் புத்தாயிரத்தின் முதல் இரு பதிற்றாண்டுகளிலும் நவீன தமிழில் வலுவாக எழுந்த மேலும்













